VijayramOnline Blogging
Request
To make your entry, choose a blog...


   Create your own blog

===========================================================================
Subject: அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது
Message: #1  2024-11-04  
ஒற்றாடல்
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்.   (௫௱௮௰௨ - 582) 
விளக்கம் ஓவியம்
எல்லாருக்கும் நிகழ்கின்ற எல்லாவற்றையும், எல்லாக் காலத்திலும், மிகவும் 
விரைவாக ஒற்றர்மூலம் அறிந்து கொள்ளுதல், வேந்தனுக்கு உரிய தொழிலாகும்  (௫௱௮௰௨)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் 
கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.  (௫௱௮௰௨)
— மு. வரதராசன்

பகைவர், நண்பர், பொதுவானவர் என எல்லாரிடத்திலும் நிகழ்வான 
எல்லாவற்றையும், எப்போதும் ஒற்றால் விரைந்து அறிந்து கொள்ள வேண்டியது 
அரசின் வேலை.  (௫௱௮௰௨)
— சாலமன் பாப்பையா

நண்பர், பகைவர், நடுநிலையாளர் ஆகிய எல்லாரிடத்திலும் நிகழும் எல்லா 
நிகழ்வுகளையும், எல்லாக் காலங்களிலும் ஒற்றரைக் கொண்டு விரைவாக 
அறிந்து கொள்வது அரசுக்குரிய கடமையாகும்  (௫௱௮௰௨)
— மு. கருணாநிதி
Submit your reply    

===========================================================================
Subject: அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது
Message: #0  2024-11-04  
அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது. 
பிறவ அனைத்தையும் யாம் அறிவோம். அதுபற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை 
இல்லை எமக்குத் தெரியும். இக்கூற்றில் வண்ண எழுத்துகளில் உள்ள 
வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்கள் எழுதுக.
Answer:

தமிழ் மொழி பெயர்களை ஆறு வகைகளாகப் பகுத்துக்கொண்டுள்ளது.[1] 
இவற்றில் செயல்பாட்டை உணர்த்தும் பெயரைத் தொழிற்பெயர் என்கிறோம். 
தமிழ்மொழி பெயர்களை உயர்திணை, அஃறிணை எனப் பாகுபடுத்திக்கொண்ட
தோடு மட்டுமன்றி, பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் 
இந்த ஆறாகவும் பகுத்துக்கொண்டுள்ளது. அவற்றில் ஒன்றுதான் இந்தத் தொழிற்பெயர்.

செயல், செய்கை, செய்தல், செயற்கை என்றெல்லாம் வருவன் தொழிற்பெயர்.

சொல்லோடு சொல் புணரும்போது தொழிற்பெயர் புணர்ச்சி எழுத்துப் புணர்ச்சி 
முறைமையில் புணர்வதுடன் சில புதிய மரபுகளையும் கொண்டு விளங்கும், 
இவற்றைப் பொருட்புணர்ச்சி எனலாம்.

சொற்புணர்ச்சியில் தொழிற்பெயரை இரு வகையாகப் பகுப்பர்.

முதனிலையை [2] நோக்கி

முதனிலைத் தொழிற்பெயர்

முதனிலைத் திரிந்த தொழிற்பெயர் - எனவும், விகுதியின் அடிப்படையில்

விகுதி குன்றிய தொழிற்பெயர்

விகுதி குன்றாத தொழிற்பெயர் - எனவும் பகுத்துக்கொளவர்.
Submit your reply    

===========================================================================

 Next 1 >>

Showing results 0 to 1 of 2

 Print this Page
       
===========================================================================