VijayramOnline Blogging
Request
To make your entry, choose a blog...

   Create your own blog

===========================================================================
Subject: அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல்
Message: #1  2025-02-27  
«  குறள்  34 குறள்  36 » 

குறள் எண்: 
 
பால்: அறத்துப்பால்  
அதிகாரம்/Chapter: அறன் வலியுறுத்தல் / Assertion of the Strength of Virtue   
 குறள் 35:
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

 சிவயோகி சிவக்குமார் விளக்கம்:
அழிக்கும் குணம்,அளவற்ற ஆசை,கடுங் கோபம்,வன்மையான வார்த்தை இவை 
நான்கும் இல்லாமல் இருப்பதே அறம்.

 மு.வரதராசன் விளக்கம்:
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு 
குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.

 சாலமன் பாப்பையா விளக்கம்:
பிறர் மேன்மை கண்டு பொறாமை, புலன்கள் போகும் வழிச் செல்லும் ஆசை, 
இவை தடைபடும் போது வரும் கோபம், கோபத்தில் பிறக்கும் தீய சொல் எனும் 
இந்நான்கையும் விலக்கித் தொடர்ந்து செய்யப்படுவது அறம்.

 கலைஞர் விளக்கம்:
பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த 
நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்.
Submit your reply    

===========================================================================
Subject: அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல்
Message: #0  2024-01-29  
Thiruvalluvar is well known for his poems known as Thirukkural says
that as the subject tells the truth about Dharma and we have to follow
this fact carefully and meticulously in life and proceed further and
so on...
Submit your reply    

===========================================================================

 Next 1 >>

Showing results 0 to 1 of 2

 Print this Page
       
===========================================================================