VijayramOnline Blogging
Request
To make your entry, choose a blog...

   Create your own blog

===========================================================================
Subject: உடல் பொருள் ஆவி(ஆத்மா) எல்லாம்
Message: #3  2022-06-22  
Submit your reply    

===========================================================================
Subject: உடல் பொருள் ஆவி(ஆத்மா) எல்லாம்
Message: #2  2025-02-26  
குறள் 72:
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
The loveless to themselves belong alone; The loving men are others' to the very bone
அதிகாரம் - 8 - அன்புடைமை
மு.வரதராசன் விளக்கம்
அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு 
வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு 
உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்.
பரிமேலழகர் விளக்கம்
அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர் - அன்பிலாதார் பிறர்க்குப் பயன்படாமையின் 
எல்லாப் பொருளானும் தமக்கே உரியர்; அன்புடையார் என்பும் பிறர்க்கு உரியர் - 
அன்புடையார் அவற்றானே அன்றித் தம் உடம்பானும் பிறர்க்கு உரியர். (ஆன் 
உருபுகளும் பிரிநிலை ஏகாரமும் விகாரத்தால் தொக்கன. 'என்பு' ஆகு பெயர். 
என்பும் உரியராதல் 'தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி அஞ்சிச் சீரை 
புக்கோன்' (புறநா.43) முதலாயினார் கண்காண்க.)
சாலமன் பாப்பையா விளக்கம்
அன்பு இல்லாதவர் எல்லாவற்றாலும் தமக்கே உரிமை உடையவராய் இருப்பர். 
அன்புள்ளவரோ பொருளால் மட்டும் அன்று; உடம்பாலும் பிறர்க்கு உரியவராய் இருப்பர்
Submit your reply    

===========================================================================
Subject: உடல் பொருள் ஆவி(ஆத்மா) எல்லாம்
Message: #1  2022-06-22  
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்
(அதிகாரம்:புலால்மறுத்தல் குறள் எண்:258)

பொழிப்பு (மு வரதராசன்): குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், 
ஓர் உயிரினடத்திலிருந்து பிரிந்துவந்த உடம்பாகிய ஊனை உண்ணமாட்டார்.
Submit your reply    

===========================================================================
Subject: உடல் பொருள் ஆவி(ஆத்மா) எல்லாம்
Message: #0  2022-03-28  
Submit your reply    

===========================================================================

 Next 1 >>

Showing results 0 to 3 of 4

 Print this Page
       
===========================================================================