VijayramOnline Blogging
Request
To make your entry, choose a blog...


   Create your own blog

===========================================================================
Subject: பருவம் விளைச்சல் அறுவடை செய்
Message: #1  2024-11-05  
காலம் அறிதல்
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.   (௪௱௮௰௨ - 482) 
விளக்கம் உவமை ஓவியம்
காலத்தோடு பொருந்த முயற்சிகளைச் செய்து வருதல், செல்வத்தைத் தம்மை 
விட்டுப் போகாமல் பிணித்து வைக்கும் கயிறு ஆகும்  (௪௱௮௰௨)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) 
செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.  (௪௱௮௰௨)
— மு. வரதராசன்

காலந் தவறாமல் காரியம் ஆற்றுவது, ஓடும் செல்வத்தை ஓடாமல் கட்டும் 
கயிறு ஆகும்.  (௪௱௮௰௨)
— சாலமன் பாப்பையா

காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை 
நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும்  (௪௱௮௰௨)
— மு. கருணாநிதி
Submit your reply    

===========================================================================
Subject: பருவம் விளைச்சல் அறுவடை செய்
Message: #0  2024-11-05  
குடிசெயல்வகை
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்.   (௲௨௰௮ - 1028) 
விளக்கம்
தம் குடியினை உயரச் செய்பவர் அதனையே கருதவேண்டும்; மற்றுக் காலத்தைப் 
பார்த்து, மானத்தையும் கருதினால், குடி கெடும்; ஆகவே அவருக்குக் காலநியதி 
இல்லை  (௲௨௰௮)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

குடி உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு உரிய காலம் என்று ஒன்று இல்லை, 
சோம்பல் கொண்டு தம் மானத்தைக் கருதுவாரானால் குடிப்பெருமைக் கெடும்.  (௲௨௰௮)
— மு. வரதராசன்

தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்ய ஆசைப்படுவர் சோம்பி, 
தம் பெருமையை எண்ணி இருந்தால் எல்லாம் கெட்டுப் போகும். அதனால் 
அவர்க்குக் கால நேரம் என்று இல்லை.  (௲௨௰௮)
— சாலமன் பாப்பையா

தன்மீது நடத்தப்படும் இழிவான தாக்குதலைக் கண்டு கலங்கினாலோ, 
பணியாற்றக் காலம் வரட்டும் என்று சோர்வுடன் தயக்கம் காட்டினாலோ 
குடிமக்களின் நலன் சீர்குலைத்துவிடும்  (௲௨௰௮)
— மு. கருணாநிதி
Submit your reply    

===========================================================================

 Next 1 >>

Showing results 0 to 1 of 2

 Print this Page
       
===========================================================================