VijayramOnline Blogging
Request
To make your entry, choose a blog...


   Create your own blog

===========================================================================
Subject: புரிதல் ஆத்மா ஆற்றல்
Message: #1  2024-11-02  
நிலையாமை
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.   (௩௱௩௰௭ - 337) 
விளக்கம்
அடுத்த பொழுதில் உயிர் வாழும், வாழாது என்பதைத் தெரியாதவர்கள் நினைப்பது, 
கோடியும் அல்ல; அதன்மேலும் அளவற்ற பலவாகும்  (௩௱௩௰௭)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அறிவில்லாதவர் ஒரு வேளையாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை.
ஆனால் வீணீல் எண்ணுவனவோ ஒரு கோடியும் அல்ல, மிகப்பல எண்ணங்கள்.  (௩௱௩௰௭)
— மு. வரதராசன்

உயிரும் உடம்பும் இணைந்திருந்தும் உ‌டம்பின் நிலையற்ற தன்மையை ஒரு 
கணப்பொழுதும் அறிய இயலாதவர் கோடிக்கும் மேலான நினைவுகளை எண்ணி நிற்பர்.  (௩௱௩௰௭)
— சாலமன் பாப்பையா

ஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றி உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களே, 
ஆசைக்கோர் அளவின்றி மனக் கோட்டைகள் கட்டுவார்கள்  (௩௱௩௰௭)
— மு. கருணாநிதி
Submit your reply    

===========================================================================
Subject: புரிதல் ஆத்மா ஆற்றல்
Message: #0  2024-11-02  
சான்றாண்மை
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.   (௯௱௮௰௫ - 985) 
விளக்கம்
ஒரு செயலை முடிப்பவரது ஆற்றலாவது, துணையாகுபவரைப் பணிமொழியால் தாழ்ந்தும் 
கூட்டிக் கொள்ளுதல்; சால்புடையார் தம் பகைவரை ஒழிக்கும் படையும் அதுவே  (௯௱௮௰௫)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஆற்றலுடையவரின் ஆற்றலாவது பணிவுடன் நடத்தலாகும், அது சான்றோர் தம் 
பகைவரைப் பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும்.  (௯௱௮௰௫)
— மு. வரதராசன்

ஒரு செயலைச் செய்து முடிப்பவர் திறமை, தம்முடன் பணி ஆற்றுபவரிடம் பணிந்து 
வேலை வாங்குதலே; சான்றாண்மை தம் பகைவரையும் நண்பராக்கப் பயன்படுத்தும் 
ஆயுதமும் அதுவே.  (௯௱௮௰௫)
— சாலமன் பாப்பையா

ஆணவமின்றிப் பணிவுடன் நடத்தலே, ஆற்றலாளரின் ஆற்றல் என்பதால் அதுவே 
பகைமையை மாற்றுகின்ற படையாகச் சான்றோர்க்கு அமைவதாகும்  (௯௱௮௰௫)
— மு. கருணாநிதி
Submit your reply    

===========================================================================

 Next 1 >>

Showing results 0 to 1 of 2

 Print this Page
       
===========================================================================